பனிப்பாறைகளில் இருந்து படையெடுக்கும் பாக்டீரியாக்கள்! ஆய்வில் பகீர் தகவல்

224
Advertisement

மாறி வரும் பருவநிலை சூழலால் உலகெங்கும் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால், கடல் நீர் மட்டம் உயர்தல், உலக வெப்பமயமாதலையும் தாண்டி மனிதர்கள் சந்திக்க உள்ள பேராபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள்.

அபேரிஸ்ட்வித் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் Greenlandஇல் எட்டு பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

நூறு அல்லது ஆயிரம் வருடங்களுக்கு முன் உருவான பனிப்பாறைக்கூட்டங்களுக்குள் இருக்கும் டன் கணக்கான பாக்டீரியாக்கள், அவை உருகும் போது மெல்ல வெளியேறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வின் அடிப்படையில், அடுத்த 80 ஆண்டுகளில் கிட்டத்தட்ட பனிப்பாறைகளில் இருந்து ஒரு லட்சம் டன் அளவுக்கு பாக்டீரியாக்கள் வெளியேறும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிதமான வெப்பநிலையை வைத்து கணக்கிட்டாலும் கூட, 2100ஆம் ஆண்டு முடிவில் சராசரி வெப்பநிலை 2 டிகிரியில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும், எந்த அளவுக்கு வேகமாக பாறைகள் உருகுகின்றனவோ அந்த அளவுக்கு பாக்டீரியாக்கள் விரைவாக வெளியேறி ஆபத்தை விளைவிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பருவநிலை மாற்றம் நாம் நினைத்ததை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக கூறும் ஆராய்ச்சியாளர்கள், சூற்றுசூழலுக்கு ஏற்ற வாழ்க்கைமுறையை பின்பற்றி வரக்கூடிய ஆபத்தை தாமதப்படுத்துவதே கையில் இருக்கும் ஒரே வழி என கருத்து தெரிவித்துள்ளனர்.