முதலையை ரவுண்டு கட்டிய மூன்று சிங்கங்கள்

369
Advertisement

காட்டின் ராஜா என்றாலே அது சிங்கம் தான் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.சில நேரங்களின் தன் பலத்திற்கு ஈடாக அல்லது தன்னை  விட பலம்வாய்ந்த விலங்குகளை கூட ஒன்று சேர்த்து தீர்த்துக்கட்ட முயற்சி செய்யும் சிங்கம்.

இந்நிலையில்,இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், காட்டு சிங்கம் ஒன்று அங்குள்ள குட்டையில் தண்ணீர் குடித்துக்கொண்டு உள்ளது.

சிங்கத்தை,  தண்ணீரில் மூழ்கிருந்த முதலை ஒன்று கவனித்துக்கொண்டு இருந்தது.தனக்கு உணவு கிடைத்து விட்டது என நினைத்து சிங்கத்தை தாக்க அருகே சென்றபோது,சரியான நேரத்தில் முதலை வருவதை அறிந்த சிங்கம் அங்கிருந்து விலகி முதலையை தாக்க முயற்சி செய்கிறது.

சிறிய முதலையாக இருந்துருந்தால் சில நிமிடங்களில் அது  உயிரை அந்த சிங்கத்திடம் பறிகொடுத்துருக்கும்.ஆனால் இது நன்றாக வளைந்த முதலை என்பதால் புத்திசாலி தணமாக அதை அச்சுறுத்தியது,ஆனால் தான் தனி ஆளாக முதலையை ஒன்றும் செய்ய முடியாது என புரிந்துகொண்ட சிங்கம் அருகில் இருந்த மற்ற சிங்கங்களை கூட்டு செய்துகொண்டு அந்த முதலையை தாக்கத்தொடங்கியது.இணையத்தில் பகிர்ந்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.