இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3 விமான விபத்துக்கள்

197
Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியத்தில்  இரண்டு என்ஜின் பிளேடுகள் சேதமடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து கவுகாத்தி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது ,பயணிகள்  மாற்று விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்திற்கு முன்பாக,டெல்லியிருந்து ஜபல்பூருக்கு சென்ற  ஸ்பைஸ்ஜெட் விமானம், 6,000 அடி உயரத்தை எட்டிய பிறகு ,கேபின் அழுத்த கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

மூன்றாவதாக, பீகார் மாநிலம் பாட்னா தலைநகரில் இருந்து 185 பயணிகளுடன் டெல்லிக்கு  சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் , பறக்க தொடங்கிய   சிறிது நேரத்தில் விமானத்தில் பறவை மோதியதில் ஒரு என்ஜினில் தீ பிடித்துள்ளது.

இதனை கவனித்த உள்ளூர்வாசிகள் மாவட்ட நிர்வாகம் மாற்று விமானநிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.உடனடியாக விமானத்தை தொடர்புகொண்டு விமானம் அவசரமாக பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.