ஆண், பெண் இருபாலருக்கும் தலையில் வழுக்கை உண்டாகிறது.
எனினும், ஆண்களே முடி உதிர்வால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டு
விரைவில் வழுக்கைத் தலையோடு நடமாடி வருகின்றனர்.
ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
டைஹைட்ரோ டெஸ்ட்டோடீரோன் என்கிற ஹார்மோன் ஆண்களிடம்
அதிகம் சுரக்கிறது. இதனால்தான் வழுக்கை ஏற்படுகிறது. இந்த ஹார்மோன்
பெண்களுக்குக் குறைவாக சுரக்கிறது.
நமது தலையில் சுமார் ஒரு லட்சம் முடிகள் உள்ளன. தினமும்
சராசரியாக 80 முதல் 100 வரை தலைமுடி உதிர்வதாகவும் இதனால்
எந்தப் பாதிப்பும் இல்லையெனவும் மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமும் அரை மில்லி மீட்டர் அளவுக்கு தலைமுடி வளரும் தன்மையுடையது.
வயது அதிகரிக்கும்போது புதிய செல்களின் உற்பத்தி குறைந்துவிடும். இதனால்
தலைமுடி வளர்வதும் குறையத் தொடங்கும்.
அதுமட்டுமல்ல, டெஸ்ட்டோடீரோன் என்னும் ஆன்ட்ரோஜென் ஹார்மோன்
அளவாகச் சுரந்தால் தலைமுடி நன்கு வளரும். அளவுக்கு அதிகமாக சுரந்தால்
முடி வளர்வதற்கான குழிகள் மூடிவிடுகின்றன. இதனால் தலைமுடி வளரமுடியாமல்
போய் பாலைவனம் போலாகிவிடும்.
பெண்களுக்கு இந்த ஹார்மோன் அளவாக சுரப்பதால் தலைமுடி
உதிர்வதில்லை. அழகு தேவதைகளாக ஜொலிக்கின்றனர்.