திருவண்ணாமலை: பெற்ற மகளை தாயே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

278

திருவண்ணாமலையில், பெற்ற தாய் யார் என்று தெரியாது என்று விளையாட்டுத்தனமாக கூறிய மகளை தாயே அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரடாப்பட்டு கிராமத்தில் லாரி ஓட்டுநர் பூபாலன்- சுகன்யா தம்பதிக்கு ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பூபாலன் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விடுவதால் வீட்டில் சுகன்யா தனியாக குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுகன்யாவின் 6 வயதான மகள் தனது பெரியப்பா பெரியம்மாவை அம்மா அப்பா என்று அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தனது தாய் யாரிடம் பேசினாலும் அதை அப்படியே அனைவரிடமும் கூறுவதையும் சிறுமி வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், சுகன்யா மன உளைச்சல் ஏற்பட்டு சிறுமியை அவ்வப்போது அடித்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், சிறுமியை தனி அறையில் வைத்து கண்மூடித்தனமாக சுகன்யா தாக்கியுள்ளார். வலியால் துடிதுடித்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தாயே பெற்ற குழந்தையை கரும்பால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது