https://www.instagram.com/p/CWEWXnSF7cv/?utm_source=ig_web_copy_link
தனது செல்லப் பிராணிக்கு டை அடிக்க 5 லட்ச ரூபாய் செலவுசெய்த பெண்ணின் விநோதச் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் அன்னா ஸ்டுபக். தடகள வீராங்கனை மற்றும் பிரபல மாடல் அழகியான இவர் தனது செல்லப் பிராணிக்கு போட்டோஷுட் நடத்த விரும்பியுள்ளார். அதற்காக 5,000 பவுண்டு செலவுசெய்துள்ளார். செல்லப் பிராணியின் வால், முகத்தைத் தவிர, உடல் முழுவதும் ஆரஞ்சு நிற வண்ணம் பூசி அசத்தியுள்ளார்.
தனது செல்லப் பிராணியை ஒரு மிட்டாய்போலக் காட்டுவதற்காக இப்படி சாயம் தீட்டியுள்ளார் அன்னா.
அந்தப் போட்டோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த உலகம் முழுவதுமுள்ள நாய்ப் பிரியர்கள் கடும் விமர்சனம் செய்தனர்.
அந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள அன்னர செல்லப் பிராணிக்கு எந்தத் துன்புறுத்தலும் செய்யாமல் டை அடித்துள்ளதாகக் கூறியுள்ளார்,
அன்னா ஸ்டுபக்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 9 மில்லியன்பேர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.