தடுப்பு காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரிபுராவில் ஒரு வழக்கில் 5 மாதம் கழித்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஒருவரை தடுப்புக்காவலைல் வைப்பதற்கு பரிந்துரைத்து உத்தரவு பெறுவதில் தாமதமானால் அந்த உத்தரவு செல்லாது என்றும், ஒருவரை கைது செய்யும் முன்பு சட்டரீதியாக அவருக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.