தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பரிதாபமான சம்பவம் பதிவாகியுள்ளது,
அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் கோமதிநாயகம் என்ற நபர் வேலை பார்த்து வருகிறார், இவரது மனைவி இந்தி ஆசிரியையாக உள்ளார்.
இந்த தம்பதிகளின் இரண்டாவது மகளான கெளசல்யா, தனியார் கல்லூரியில் நர்ஸிங் படித்து வருகிறார். தற்போது நிலவி வரும் வானிலை மாற்றம் காரணமாக கௌசல்யாவுக்கு ஜலதோஷம் ஏற்பட்டுள்ளது , இதனால் வெந்நீரை பானையில் ஊற்றி மருந்து கலந்து ஆவிப்பிடித்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெந்நீரிலேயே மயங்கி விழுந்துள்ளார்.
தனது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பானைக்குள் தலையை வைத்தபடியே மயங்கிய நிலையில் இருந்துள்ளார், பின் வீடு திரும்பிய பெற்றோர் மகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கௌசல்யாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனவே மாணவி இறப்பு குறித்து தகவல் அறிந்த பொலீஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.