கழிப்பறையில் ஆனந்தமாக கேம் விளையாடியவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு

84
Advertisement

காலைக்கடனைக் கழிப்பதற்காகக் கழிப்பறையில் கோப்பையில் அமர்ந்திருந்தபோது
வீடியோ கேம் விளையாடிய இளைஞரின் பின்புறத்தைப் பாம்பு கடித்துள்ள சம்பவம்
இணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த 28 வயது இளைஞரான தசாலி, அண்மையில் காலைக் கடன்களைக்
கழிப்பதற்காகச் சென்றுள்ளார். அங்கு கோப்பையில் அமர்ந்திருந்தபடியே அவர் செல்போனில்
வீடியோ கேம் விளையாடத் தொடங்கினார்.

மெய்ம்மறந்து மும்முரமாக கேம் ஆடி மகிழ்ச்சியில் திளைத்திருந்தபோது அவரது பிட்டத்தில்
ஏதோ கடிப்பதை உணர்ந்தார். அவர் திரும்பிப் பார்த்தபோது மலைப்பாம்பு கடித்துக்கொண்டிருந்தது.
சட்டென்று அந்தப் பாம்பைத் தட்டிவிட்டு வெளியே ஓடிவந்துவிட்டார்.

Advertisement

விரைந்து மருத்துவமனைக்குச்சென்று சிகிச்சை பெற்றார். அத்துடன் தீயணைப்புத்துறை மற்றும்
மீட்புத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் கழிப்பறையில் சுருண்டுகிடந்த அந்த விஷமற்ற
மலைப்பாம்பை பிடித்துச்சென்றனர்.

பின்னர், 2 வாரங்களாக தசாலி தனது வீட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்தாமல் அங்குள்ள
மசூதியின் கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ளார். மார்ச் மாதத்தில் நடந்த சம்பவம் தற்போது
வைரலாகி வருகிறது.