தங்கத்தின் விலை உயர்வு

153

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்துள்ளதால், தங்கம் வாங்குவோர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக ஏறுமுகத்தில் உள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து, 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 440 ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 61 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 61 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரேநாளில் தங்கம் விலை சவரனுக்கு, மேலும் 440 ரூபாய் உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்க நினைத்தோர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.