ராஜஸ்தான் முதலமைச்சரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது

193

ராஜஸ்தான் முதலமைச்சரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையின் படி, அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டுக்கு கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட்டுக்கு ஆதரவான 82 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி உயர்த்தினர்.

மேலும், சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களையும் அளித்தனர். ராஜஸ்தானில் முதலமைச்சர் தேர்வில் சிக்கல் நீடிக்கும் நிலையில், சோனியாகாந்தி முடிவை எதிர்பார்த்து இருதரப்பினரும் காத்திருக்கின்றனர். இதற்கிடையே, மத்தியபிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், அவசரமாக டெல்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர் என்பதால், அவர் சமரச பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்படுவார் என்று தெரிகிறது.