பறவை காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் அழித்ததன் எதிரொலியாக சிலி நாட்டில் ஒரு முட்டையின் விலை இந்திய மதிப்பில் 21ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது…

104
Advertisement

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சிலி நாட்டில் கடந்த10 மாதத்தில் பறவை காய்ச்சல் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டன. எனவே இறைச்சி, முட்டை சந்தை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் தேவையை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டை விட முட்டையின் விலை 35சதவீதம் அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் முட்டை ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அங்கு 1 முட்டை இந்திய மதிப்பில் 21ஆயிரத்து294 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்றொரு பக்கம் பணம் ஈட்ட பல்வேறு முயற்சிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.