இவனை போய் நல்லவேணு நினைச்சிட்டோம் !

203
Advertisement

ஒருமுறை குடிப்பழக்கத்திற்கு அடிமையானால், அதை விட்டுவிடுவது மிகவும் கடினம் என்று கூறுவார்கள்.இந்நிலையில் வேடிக்கையாக ஒரு வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.இன்ஸ்டாகிராம் ஒன்றில் பகிரப்பட்டு இந்த வீடியோவில், ஒரு நபர் இனி குடிக்கப்போவதையில் என சத்தியம் செய்தது போலவும், ஒரு நாள் அவர் நின்றுகொண்டு இருக்க அவரின் நண்பர் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை கையில் பிடித்து அவரை நோக்கி நகர்ந்து வருகிறார்.

இதனை பார்த்த அந்த நபர்,மதுவை தவிர்க்க பின்வாங்கி கீழே விழுந்துபடி பின்னோக்கி செல்கிறார்.ஒரு கட்டத்தில் தடுப்பில் முட்டி நிற்க ,கடைசியாக மதுவை தவிர்க்கமுடியாமல் அங்கிருந்த ஒரு கண்ணாடி க்ளாஸ்யை தன் நண்பனிடம் நீட்டிவிடுகிறார்.வேடிக்கையாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த வீடியோ தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.பல வேடிக்கையான கருத்துகளையும் பதிவிடுவருகின்றனர்.