மத்திய அரசின் நடவடிக்கையால், கனடாவில் உள்ள இந்திய மாணவர்களை  நாடு கடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

318
Advertisement

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக சென்றனர்.

ஆனால் அவர்கள் போலி சேர்க்கை கடிதங்கள் மற்றும் ஆவணங்களால் ஏமாற்றப்பட்டனர். அதன்காரணமாக மாணவர்களை நாடு கடத்த கனடா அரசால் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கிடையே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினையில் மாணவர்கள் பக்கம் தவறு இல்லை என்பதால் மனிதநேய அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கனடா அரசிடம் மத்திய அரசு முறையிட்டது. இதனை தொடர்ந்து கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.