இதயத்தை வருடும் சிறுமியின் அசத்தலான நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் தன்னிடம் ஐஸ்கிரீம் கேட்டு நிற்கும் சிறுமியிடம் குறும்பாக ஏமாற்றுகிறார் கடைக்காரர். சில விநாடிகள் பொறுத்துப் பார்த்த சிறுமி, அந்தக் கடைக்காரர் ஐஸ்கிரீம் தராவிட்டாலும் அறியாமையால் அங்கேயே நிற்கிறாள்.
அதேசமயம், தனக்கு ஐஸ்கிரீம் கிடைக்காத ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சட்டெனப் பாலிவுட் பாடல் ஒன்றுக்குரிய நடனத்தை ஆடத்தொடங்குகிறாள்.
சிறுமியின் திறமையைக் கண்டு வியந்துபோன வியாபாரியும் கடைக்கு வெளியே வந்து சிறுமி மாதிரியே நடனமாடுகிறார்.
இறுதியில் பாசத்தின் அடையாளமாக சிறுமியின் நெற்றியில் முத்தமிடுகிறார் ஐஸ்கிரீம் கடைக்காரர்.
இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் இதயத்தை கொள்ளைகொண்டு வருகிறது.
தனக்கு ஐஸ்கிரீம் தராமல் ஏமாற்றிய அந்த வியாபாரியே வெட்கப்படும் அளவுக்கு நடனமாடிய கள்ளங்கபடமில்லாத சிறுமியின் நடனத் திறமையை வலைத்தளவாசிகள் மனந்திறந்து பாராட்டி வருகிறார்கள்.