சமீபத்தில் அமெரிக்காவைத் தாக்கிய சூறாவளியின்
வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெக்சிகோ வளைகுடாவுக்கு அருகிலுள்ள மிசிசிப்பி
ஆற்றின் கரையில் அமைந்த லூசியானா மாகாண
நகர்ப் பகுதியான நியூ ஆர்லின்ஸ் ஆரவாரமான
ஆடைகளுக்கும் தெரு விருந்துகளுக்கும் புகழ்பெற்றது.
புகழ்பெற்ற அந்த நியூ ஆர்லியன்ஸ் பகுதியைக் கடந்த
மார்ச் 22 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு சூறாவளி
தாக்கியது..இருண்ட வானத்தின் பின்னணியில் ஒரு
பெரிய கருப்புப் புனல்போல் கட்டடங்களின்மேல்
வட்டமிட்டது அந்த சூறாவளி.
கட்டடங்களின் கூரைகளைப் பிய்த்து எறிந்து
சாலையில் சென்ற வாகனங்களை சேதப்படுத்தியது.
பலரைக் காயப்படுத்தியது. ஒருவர் பலியானார்.
2 மைல் தொலைவு வரை வீடுகள், கட்டடங்களைத்
தரைமட்டமாக்கியது. மின்கம்பங்களைப் பிடுங்கி
எறிந்து வாகனங்களை பாழ்படுத்தியது அந்தச் சூறாவளி.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜடா சூறாவளி தாக்கிய
நிலையில், இந்த ஆண்டு புதிய சூறாவளி தாக்கி
மிரளவைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்குமுன்பு கத்ரீனா
சூறாவளி தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியதுடன்
1800க்கும் மேற்பட்டோரைப் பலிகொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாதிப்பை சரிசெய்ய 1,7 பில்லியன் டாலருக்கும்
அதிகமான தொகையை அதிபர் ஜோ பைடன் ஒதுக்கியுள்ளதாக
அமெரிக்கப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.