பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் நுழைந்த பிரபல நடிகை

286
Advertisement

தமிழ் சினிமாவில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதைத் தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என தமிழ் படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப்படங்களில் இவர் நடித்துள்ளார்.இவர் தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது. இதனை தொடர்ந்து தற்போது தமிழைப்போல தெலுங்கிலும் டிஜிட்டலில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நான்ஸ்டாப் பிக்பாஸ் போட்டியில் இவர் பங்கேற்பாளராக கலந்துகொண்டுள்ளார்.

தெலுங்கு ரசிகர்களுக்கிடையே இந்த நான்ஸ்டாப் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்பொழுதே பிந்துமாதவி ஆர்மி என பல டிவிட்டர் மற்றும் ஹாஷ்டாக்குகள் துவங்கப்பட்டு பரபரப்பாகி வருகிறது. தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் நாகர்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கி வருகிறார். இப்போட்டி பிந்து மாதவிக்கு தெலுங்கிலும் பெரும் புகழை பெற்றுத்தரும் என அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

பிந்து மாதவிக்கு தற்போது தமிழில், நடிகர் சசிகுமாருடன் பகைவனுக்கு அருள்வாய், மாயன் மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஜெயகொடி இயக்கத்தில் நாயகியை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட ‘யாருக்கும் அஞ்சேல்’ படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .