டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது…

130
Advertisement

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ள பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் பாலியல் தொந்தரவு செய்தாக குற்றம்சாட்டி, மல்யுத்த வீரர், வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதிதாக திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் வழிமறித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர்.

இந்நிலையில், போராட்டத்தை ஒருங்கிணைத்த பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஜந்தர் மந்தருக்கு போராட்டம் நடந்த வந்த மல்யுத்த வீரர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.