பொறியியல் கல்லூரிகளில் பணம் செலுத்தி சேர்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது

100

பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள், கல்லூரிகளில் பணம் செலுத்தி சேர்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. முதலில் விருப்ப இடங்களுக்கான கல்லூரிகள் தோ்வும், அதனைத் தொடா்ந்து உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டு உத்தேச ஒதுக்கீடும் வழங்கப்பட்டன. 15ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு கடிதம் மாணவா்களுக்கு இணையவழியில் வழங்கப்பட்டது.

கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட கடிதத்தை, 7 வேலை நாள்களுக்குள் கல்லூரிக்கு கொண்டு சென்று வழங்கி சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை நடப்பு கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள், கல்லூரிகளில் பணம் செலுத்தி சேர்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தவறினால் அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மீண்டும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement