“அம்மா சாப்பாடு போடமாடிக்கிறாங்க…” – காவல்நிலையத்தில் கதறி அழும் சிறுவன்

239
Advertisement

பீகார் மாநிலம் சீதாமர்ஹி ( sitamarhi ) மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையதளவாசிகளை கண்கலங்க வைத்துள்ளது.அங்குள்ள சந்திரிகா மார்க்கெட் தெருவில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன்,காலை எட்டு மணியளவில் அப்பகுதி காவல் நிலையத்திற்கு அழுதபடி வந்துஉள்ளான்.

பின் சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்தபோது… அந்த சிறுவன் கூறுகையில், ” என் அம்மா..சாப்பாடு கேட்டா அடிக்கிறாங்க… சாப்பாடு கூட சரியா போடமாற்றங்க. அவங்களும் சமைக்க மாட்டிக்கிறாங்க மத்தவங்களையும் சமைக்க விடமாடிக்கிறாங்க..” என கதறி அழுதபடி கூறுகிறான் அந்த சிறுவன்.

இதை கேட்ட காவலர்கள் சிறுவனுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுத்து,சமாதானம் செய்தனர்.பின் சிறுவனின் தாயை அழைத்தவர்சொல்லி கண்டித்து.. சிறுவனையும் அவருடன் அனுப்பியுள்ளனர் பீகார் காவல்துறையினர்.