தன்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி – நளினி

187

தன்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி என்று, பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் சிறையில் இருந்து விடுதலையான நளினி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, வேலூர் சிறையில் இருந்து நளினி நேற்று விடுதலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின் நகல்கள் கிடைத்ததையடுத்து விடுதலைக்கான நடைமுறைகள் நிறைவு பெற்றது.

இதையடுத்து நேற்று மாலை சிறையில் இருந்து நளினி விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பின் பேட்டி அளித்த நளினி, தன்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.