வகுப்பறை டிவியில் “ஆபாசப் பாடல்”  – கல்வியை சீரழிக்கும் ஆசிரியர்   

48
Advertisement

பள்ளிமாணவர்களின் படிப்பை கேள்விக்குறியாக்கும் பல்வேறு நிகழ்வுகள் பீகார் மாநில பள்ளிகளில் நிகழ்ந்துள்ளது.தற்போது மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

அதில் பீகார் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர், வகுப்பறையில் பொருத்தப்பட்டுள்ள டிவியில்  ‘ஆபாசப் பாடலை’  ரசித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்.அவருடன் வகுப்பறையில் உள்ள மாணவர்களும் பாடலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கல்வி பயலும் இடத்தில் , சிறுவர்கள் பார்த்து முகம்சுளிக்கும் விதம் பாடல் ஒன்றை போட்டு ரசித்துக்கொண்டு இருக்கும்  ஆசிரியரின் இந்த செயல்,பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மாணவர் ஒருவர்  பகிர்ந்த இந்த வீடியோ பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ  வைரலாகியதை அடுத்து ,மாவட்டநிர்வாகம் சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.