“உன்ன பாத்தாலே கோவம் வருது” டீச்சர் மீது சிறுவனின் சுட்டி கோவம்

423
Advertisement

இணையம் முழுவதும் சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான வீடியோக்களால் நிரம்பியுள்ளது.குறிப்பாக சிறுகுழந்தைள் செய்யும் சேட்டைகள் ஆகட்டும் , அவர்கள் வெளிப்படுத்தும் கோபம் ஆகட்டும் என்றுமே அழகு தான்.

இது போன்று மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் சிறுவர் பள்ளியில் ,மாணவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்துகொண்டு இருக்கின்றனர்.அதில் ஒரு சிறுவன் தன் நோட் புக்கை கையில் வைத்திருந்த ரப்பரை கொண்டு வேகமாக அழித்துக்கொண்டு இருக்கிறான்.முகம் செம கோவத்தில் வைத்துக்கொண்டு இருக்கும் குழந்தையை கவனிக்கும் அரிசியை அவனிடத்தில் ,

இப்படி அழித்தால் நோட்புக் கிழிந்துவிடும் என கூறுகிறார்.தன் ஆசிரியை கூறியதற்கு எந்த பதிலும் சொல்லாமல்,முகத்தை கோவமாகவே வைத்து உள்ளான் இந்த சிறுவன்.

இதை அருகில் கவனித்துக்கொண்டு இருந்த மற்றொரு ஆசிரியை , சிறுவனை பார்த்து , ஏன் கோபமாக இருக்கிறாய் என்று கேட்க, ஏய் ‘உன்னை பார்த்து எனக்கு கோபம் வருகிறது’ என மழலை குரலில் கோவத்தில் சொல்கிறான் அந்த குழந்தை.

இதை கேட்டும் மற்ற குழந்தைகள் சிரிக்க,அந்த ஆசிரியை சிறுவனிடம் கோவத்திற்கான காரணத்தை கேட்டதுக்கு,கோவத்தில் அந்த குழந்தை கூறுவதை கேட்டு , அடித்து விடுவேன் என சொல்கிறார் ஆசிரியை.ஆசிரியை சொன்னதுக்கு அந்த குழந்தை சிறிதும் தாமதிக்காமல் “வா அடி” என்கிறான்.

குழந்தையின் இந்த சுட்டித்தனமா கோவம் ,ஆசிரியை கேள்விக்கு அளித்த பதில் இணையவாசிகளை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.