கூகுள் பே,போன் பே-வுக்கு போட்டியாக அறிமுகமாகும் டாடா யூபிஐ

342
Advertisement

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமங்களின் ஒன்றான டாடா குழுமம் விரைவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மார்க்கெட்டில் களமிறங்க முடிவெடுத்துள்ளது.Google Pay, Phonepe மற்றும் Paytm உள்ளிட்ட செயலிகளுக்கு போட்டியாக புதிய செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. டாடா நிறுவனத்தைப் பொறுத்த வரை உப்பு முதல் எஃகு வரை பலதுறைகளில் தடம் பதித்து இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளைக் சேவையை அறிந்த டாடா நிறுவனம், இந்த மார்கெட்டில் களமிறங்கவும் முடிவெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக NPCI-யிடம் இந்த செயலியையை தொடங்குவதற்கான அனுமதியைக் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா நிறுவனம் தொடங்க இருக்கும் UPI செயலியானது டாடா குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தகப் பிரிவான டாடா டிஜிட்டலின் கீழ் இருக்குமாம் . அதன் UPI அமைப்பை இயக்க ஐசிஐசிஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இப்போதைய சூழலில் இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலான UPI பரிவர்த்தனைகள் Google Pay அல்லது PhonePe செயலிகளின் வழியே நடைபெறுகின்றன. Paytm, Amazon Pay மற்றும் WhatsApp pay போன்ற பிற யுபிஐ செயலிகள் ஒப்பீட்டளவில் குறைந்த மார்க்கெட் ஷேரைக் கொண்டுள்ளன. தற்போது இந்த போட்டியில் டாடா குழுமமும் களத்தில் இறங்கினால், போட்டி அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.