90ஸ் கிட்ஸ்ன் ப்ளாக்பெர்ரிக்கு டாடா !

305
Advertisement

பிளாக்பெர்ரி இயங்குதளம் கொண்டு செயல்படும் மொபைல்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேவை இன்று முதல் நிறுத்தப்பட உள்ளது.

இதனால் பிளாக்பெர்ரி கிளாசிக் மொபைல்களை இனி பயன்படுத்த முடியாது.

தொழில்நுட்ப சந்தையில் தனித்துவமான இயங்குதளம், பிரத்யேக வடிவமைப்பு என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் களம் இறங்கிய பிளாக்பெர்ரி நிறுவனம் இன்று தனது சேவையை கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் அதிக பயனாளர்களை கொண்டு இந்த பிளாக்பெர்ரி நிறுவனம் ஆப்பிள்களின் அதிவேக வளர்ச்சியால் தாக்குப்பிடிக்க முடியாமல் திணற தொடங்கியது.

முதலில் தனது சொந்த இயங்குதளத்தை விட்டு வெளியே வந்த பிளாக்பெர்ரி, ஆண்டிராய்டை தழுவி இயங்கி வந்தது.

ஆனால் அதுவும் கைகொடுக்காத நிலையில், 2016ம் ஆண்டு மொபைல் உற்பத்தியை விட்டே வெளியேறியது.

ஆனால் சீனாவின் டிசிஎல் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களுக்கு தனது ஆதரவை வழங்கியது.

இந்த நிலையில், அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

இன்று முதல் பிளாக்பெர்ரி 10, 7.1 ஓஎஸ் மற்றும் அதற்கு முந்தைய கிளாசிக் சாதனங்களுக்கான ஆதரவை நிறுத்தியுள்ளது.

இதனால் பிளாக்பெர்ரி கிளாசிக் மொபைல்களை இனி யாரும் பயன்படுத்த முடியாது.

பிளாக்பெர்ரி மொபைலை விட்டு ஏற்கனவே பெரும்பாலானோர் வெளியேறி இருந்தாலும் அதன் உடனான நினைவுகளை பலரும் தற்போது நினைவுக் கூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.