+2 வில் ஃபெயிலான 45,000 மாணவர்களுக்கும் போன் போட்டு பேசிய தமிழக அரசின் சூப்பர் நடவடிக்கை…

103
Advertisement

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே-8 ஆம் தேதி வெளியான நிலையில்,

பல்வேறு மாணவர்களுக்குத் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக போன் கால் சென்றுள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் 8,36,593 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியிருந்த நிலையில், பரிச்சையில் தோல்வியைச் சந்தித்த 45 ஆயிரம் மாணாக்க செல்வங்களும், தற்கொலை செய்து கொள்வது போன்ற தவறான முடிவுகளை எடுத்திடக் கூடாது, என்பதற்காகத் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக அனைவருக்கும் போன் கால் சென்றுள்ளது. எனவே தற்கொலை எண்ணத்தைத் தடுக்கும் விதமாக ஆலோசனை வழங்க இந்த போன் சென்றுள்ளது.

தேர்வில் தோல்வி அடைந்தவர்களிடம் ஆறுதலாகப் பேசவும் அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் பெற்றோர்களுக்குத் தேவையான அறிவுரைகளும், இந்த போன் கால் மூலம் வழங்கப்பட்டுள்ளது, எனவே தமிழ்நாடு அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.