கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே… கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு … செல்வங்களில் சிறந்த செல்வம் கல்விச் செல்வம் என கல்வியின் சிறப்பை அடுக்கிக்கிட்டே போகலாம்… ஆனால், தற்போதைய டிஜிட்டல் யுகத்துல கல்வியின் தரம் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு சான்றாகதான் தற்போது ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியிருக்கு…. அதாவது, மாணவர்களின் கல்வி நிலையை அறியும் வகையில், Annual Status of Education Report – 2023 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வறிக்கையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 26 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில், 1,664 கிராமங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள 14 முதல் 18 வயதுக்குட்பட்ட 34,745 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச மாநிலங்களில் மட்டும் 2 மாவட்டங்களிலும், மற்ற மாநிலங்கள் அனைத்திலும் தலா ஒரு மாவட்டத்திலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள 14 – 18 வயதுடைய பதின்ம வயதினரில் 43 சதவீத குழந்தைகள் எளிய ஆங்கில வாக்கியங்களை படிக்கத் தெரியாமலும், 25 சதவீத குழந்தைகள் 2-ஆம் வகுப்பு பாடத்தைகூட தங்களது தாய்மொழியில் சரளமாக படிக்க தெரியாம திணறுவது தெரியவந்துருக்கு. தற்போது கிராமப்புரங்களில் 14 முதல் 18 வயதுடைய மாணாக்கர்கள்ல ஆங்கிலம் படிக்கத்தெரிஞ்சவங்கள்ல, முக்கால்வாசி பேருக்கு அதாவது 73.5% பேருக்கு அவற்றின் அர்த்தம் புரிகிறது. இது 2017 ஆண்டறிக்கைய ஒப்பிடும்போது அதிகமாகவே பார்க்கப்படுகிறது. இருந்தாலும், கணிதம் சார்ந்த அறிவு குறைவாகவே உள்ளது. கணித அறிவை பொறுத்தவரை 43.3 சதவீதம் பேருக்கு மட்டுமே மூன்று இலக்க எண்ணை ஒற்றை இலக்க எண்ணால் வகுக்க முடிகிறது. அதாவது மூன்றாம், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இருக்க வேண்டிய திறன், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட கிராமப்புற பதின்ம வயதினரிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆய்வு முடிவின்படி 90.5 சதவீத இளைஞர்கள் சமூக வலைதளத்தினை உபயோகிக்கின்றனர். மேலும், பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் சோஷியல் மீடியாக்களில் உள்ளனர். அதன்படி 93.4% ஆண்களும், 87.8 சதவீத பெண்களும் சோஷியல் மீடியாக்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சமூக ஊடகங்களை பயன்படுத்தும் இளைஞர்களில் சுமார் பாதி பேர் மட்டுமே சமூக ஊடகங்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில் உபயோகிப்பது என்பதை அறிந்திருப்பதாகவும், பெண்களை விட ஆண்களே இதனை நன்கு அறிந்திருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ருக்கு. இதுல ரொம்ப அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமா பார்க்கப்படுறது, 25 சதவீத குழந்தைகள் 2-ஆம் வகுப்பு பாடத்தைகூட தங்களது தாய்மொழியில் சரளமாக படிக்க தெரியாம திணறுவதுதான். இதற்கு தீர்வா பாடத்திட்டத்தில் மாற்றம் வேண்டும்னு சொன்னாலும், செல்ஃபோன் பயன்பாடு அதிகரிப்பும், வாசிப்பு பழக்கம் குறைஞ்சதும் முக்கிய காரணமா பார்க்கப்படுது. வாசிப்பு பழக்கம் தான் மனிதனை அறிவுள்ளவனாக மாற்றக்கூடிய ஆயுதம். ஆனால், இப்போ இருக்கக்கூடிய இளைஞர்கள் செல்போன் உலகத்தில் சிக்கிக்கிட்டு இருக்காங்க. இதனால் இன்றைய மாணவ சமுதாயம் புத்தகத்தை புரட்டுவதற்கு கூட சிரமப்படுறாங்க… செல்போன்ல எல்லாத்தையும் தெரிஞ்சிக்குற அதிநவீன வசதிகள் வந்துடுச்சுனு நீங்க நினைக்கலாம். ஆனா… இணையதளம் மொத்தமா முடங்கிட்டா செல்ஃபோன்-அ மட்டுமே நம்பி இருக்கவங்க நிலை என்னாகும்…. எனவே, இதை கொஞ்சம் நினைவுல வச்சு இன்றைய தலைமுறையினர் செல்ஃபோன் மோகத்தை குறைச்சிக்கிட்டு… வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்துனா, தன்னம்பிக்கையும் உயரும்…. தங்கள சுற்றி இருக்கக்கூடியவர்களின் நிலையும் தன்னால உயரும்…. மீண்டும் மற்றுமொரு தகவலோடு சந்திக்கிறோம்… நன்றி வணக்கம்.
தமிழ் படிக்கவே தடுமாறும் தமிழ்நாட்டு மாணவர்கள் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!!
Advertisement