வன்முறையில் சூறையாடப்பட்டப் பள்ளி மீண்டும் செயல்பட நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார்.

136

வன்முறையில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மீண்டும் வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

கனியாமூர் தனியார் பள்ளி வன்முறையை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு புதிய மாவட்ட ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஷ்ரவன் குமார் நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதைதொடர்ந்து வன்முறை நடைபெற்ற கனியாமூர் தனியார் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், கனியாமூர் தனியார் பள்ளி மீண்டும் வழக்கம்போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement