கடும் நிதி நெருக்கடியில் இலங்கை…7500 கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

284
Advertisement

கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. உணவு பொருட்கள் தொடங்கி பல பொருட்களும் விலை வேகமாக அதிகரித்து வந்தது.முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்துகள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து கட்டணங்கள் அங்கு அதிகரித்துள்ளன. இதன் காரணமாக , பொதுமக்கள் குறைந்த கட்டணம் கொண்ட ரயில் போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் கூட்டம் அலை மோதுகிறது.

இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசு பல்வேறு நாடுகளுடன் நிதியுதவி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு உதவும் வகையில் இந்திய அரசு 7500 கோடி ரூபாய் கடன் உதவியை அளித்துள்ளது.இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்சே உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சந்தித்து பேசினர். அதன்பின்னர் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை மூலமாக இலங்கைக்கு இந்தியா கடன் உதவி வழங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement