“இப்படி ஆயிடுச்சு” ஸ்பைஸ்ஜெட் ட்விட்

269
Advertisement

இந்தியாவின் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் செவ்வாய் இரவு “ரான்சம்வேர்”எனப்படும் இணையவழி தாக்குதலை எதிர்கொண்டதாக தெரிந்துள்ளது.இதன் காரணமாக காலை விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

இருப்பினும், நிலைமை சரிசெய்யப்பட்டு, அனைத்து ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் இப்போது வழக்கம் போல் இயங்குகின்றன என்று விமான நிறுவனம் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

அதில், ஸ்பைஸ்ஜெட்  இணையதளம் நேற்றிரவு சைபர் தாக்குதலுக்கு உள்ளானது ,இதன் காரணமாக இன்று காலை விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது.எங்கள் தகவல் தொழில்நுட்பக் குழு நிலைமையைக் கட்டுப்படுத்தி சரிசெய்துள்ளது மற்றும் விமானங்கள் இப்போது சாதாரணமாக இயக்கப்படுகின்றன என தெரிவித்து உள்ளது.