மாப்பிளை 90’ஸ் கிட்ஸ் போல – 64 கலைகளையும் முகத்தில் கொண்டுவந்த மணமகன்

90
Advertisement

திருமணம் என்பது அனைவரின் வாழ்வில் மறக்கமுடியாத மகிழ்ச்சி நினைவுகளாக அமையும் தருணமாகும்.இனி இருக்கும் வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கப்போவது இவங்க தான் என்பதை உடனே ஏற்றுக்கொள்ள பெண்களுக்கு சற்று கடினம் தான்.

அதே வேளையில் திருமண நாளில் மகிழ்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.முதல் முறை மணமேடையில் ஒரு பெண் உடன் உட்காந்து இருக்கும் மாப்பிள்ளையின் முக பாவனைகளை கவனித்தாலே போதும், வேடிக்கையாக நேரம் கடந்துசெல்லும்.

இங்கும் அப்படி தான்,திருமணத்தில் மணமகன் ஒருவரின்  முக பாவனைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இன்ஸ்ட்ராகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மணமக்கள் அருகே அருகே நாற்காலில் உட்காந்து உள்ளனர்.மாப்பிள்ளை 90’ஸ் போல,அவர் ஒரு பெண்ணிற்கு அருகில் நெருக்கமாக உட்காந்து இருப்பதை நினைத்து பதற்றம் ஒரு புறம் , மகிழ்ச்சி ஒருபுறம் என்பது அவரது முக பாவனையில் தெரிகிறது.

Advertisement

இப்படி இருக்க மற்றொரு புறம் , மணமக்களுக்கு வழங்கப்பட்ட குலாப் ஜாமுனை கவனிப்பதா ? அல்லது மனைவியை கவனிப்பதா ? என்பதும் ஒரு குழப்பம்.ஆக மொத்தத்தில் தன் முக பாவனைகளிலே அணைத்து உணர்வுகளையும்  வெளிப்படுத்திவிடுகிறார்  மாப்பிள்ளை.

இந்த வீடியோவை காணும் இணையவாசிகள்,மணமகனை வாழ்த்தியும் மற்றும் வேடிக்கையாகவும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.