ஷாஜஹான் செய்யத் தவறியதைச் செய்துமுடித்த இளைஞர்

174
Advertisement

ஷாஜஹான் கட்டத் தவறியதைத் தான் கட்டியுள்ளதாகப் பெருமிதம் கொள்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்.

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை அனைவரும் அறிவோம். மனைவியின் மீதான காதலின் சின்னமாக உள்ள தாஜ்மஹாலைப்போல் தன் மனைவிக்கும் ஒரு காதல் சின்னத்தைக் கட்டியுள்ளார் ஆனந்த் ஷோக்ஸே.

மத்தியப்பிரதேச மாநிலம், புர்ஹான் நகரில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் 4 படுக்கையறை, ஒரு சமையலறை, ஒரு நூலகம், ஒரு, தியான அறை ஆகியவை உள்ளன. 3 ஆண்டுகளில் இந்த வீடு கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலைப்போல் இந்த வீட்டிலும் கோபுரங்கள் உள்ளன. இரவு நேரத்தில் தாஜ்மஹாலைப்போல் பிரகாசிக்கும்வண்ணம் விளக்குகள் இந்த வீட்டிலும் பொருத்தப்பட்டுள்ளன.

புர்ஹான் நகரிலுள்ள தபதி நதியின் கரையில் தாஜ்மஹாலைக் கட்ட ஷாஜஹான் விரும்பியதாகவும், ஆனால், பல காரணங்களால் ஆக்ராவில் கட்டியதாகவும் சொல்லப்படும் வரலாறுகளை சுட்டிக்காட்டும் ஆனந்த் ஷோக்ஸே, ஷாஜஹான் கட்டத் தவறியதைத் தான் கட்டியதாகப் பெருமிதம் கொள்கிறார்.