சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து

274

தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக, சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை-திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து நாள்தோறும் இயக்கப்பட்டு வரும் சேலம்-கோவை பயணிகள் ரயில் மற்றும் கோவை-சேலம் பயணிகள் ரயில்கள் இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.