சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தோனி மாதிரி சிந்தித்து பந்து வீசினேன் என்று கூறியிருப்பது, கிரிக்கெட் ஜாம்பவான்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

189
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில், மும்பை அணிக்காக கடைசி ஓவரை சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் வீசினார்.  கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசிய அர்ஜுன் தெண்டுல்கரால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், வெற்றி குறித்து பேசிய அர்ஜுன் டெண்டுல்கர், தோனி போல் சிந்தித்து, பவுண்டரி லைன் தூரமாக இருக்கும் திசைக்கு ஏற்றவாறு, பேட்ஸ்மேனை ஆட வைக்கும் வகையில் பந்து வீசினேன் என்று கூறினார். இவரது கருத்து கிரிக்கெட் ஜாம்பவான்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.