ரஷ்யாவிடமிருந்து இதை கொள்முதல் செய்வதை நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு

393

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இந்த போரால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிபொருளை நம்பி உள்ளன.

ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் 35 சதவிகிதத்திற்கு அதிகமான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெறுகிறது.

இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் 90 சதவிகிதத்தை நிறுத்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன.

பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.