ஆப்பு வைக்கும் ஆபத்தான ஆன்ட்ராய்டு Apps

227
Advertisement

நிஜ உலகை விட டிஜிட்டல் உலகில் நேரம் செலவழிப்பதாலோ என்னவோ, நிறைய பிரச்சினைகளும் இணையம் வழியாகவே வருகிறது.

பெரு நிறுவனங்கள் துவங்கி சாமானிய மனிதன் முதல் App தயாரிக்க துவங்கியதில் இருந்து, ஆப்பிள் முதல் ஆண்ட்ராய்டு போன் பயனர்களும் பல ஆப்புகளுக்கு ஆளாகின்றனர்.

Google Playstoreஇல் 4.8 போன்ற அதிக ரேட்டிங் வாங்கி, மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தி ஏமாற்றும் Appகளும் ஏராளம்.

இது போன்ற Appகளை அவ்வப்போது, Google Playstore கண்டுபிடித்து நீக்கினாலும் கூட, ஏற்கனவே அவற்றை தங்கள் போன்களில் பதிவிறக்கம் செய்துள்ள பயனர்கள் uninstall செய்யாமல் தேவையற்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

அதிலும், குறிப்பாக  Document Manager, Coin track Loan, Cool Caller Screen, RGB Emoji Keyboard, Camera Translator Pro, Fast PDF Scanner, Air Balloon Wallpaper, Colorful Messenger, Thug Photo Editor, Anime Wallpaper, Peace SMS, Happy Photo Collage, Pellet Messages, Smart Keyboard, 4K Wallpapers,  Original Messenger போன்ற appகள் பயனர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், இவற்றை unistall செய்ய சைபர் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.