Wednesday, February 19, 2025

பொறுப்புணர்வுமிக்க ரக்கூன் தாய்…

ரக்கூன் நாய் ஒன்று தனது குட்டிகளைத்
தங்களின் வசிப்பிடமான மரப்பொந்துக்குள்
தாய்மையுணர்வுடன் கொண்டுசெல்லும் வீடியோ
சமூக வலைத்தளவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

சுறுசுறுப்பான, தந்திரமான குணத்துக்குப் புகழ்பெற்றவை
ரக்கூன் நாய்கள். வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான்
ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படும் ரக்கூன்கள்
உருவ அமைப்பில் கரடிபோல் தோற்றம் கொண்டிருந்தாலும்
இவை நாய் என்றே அழைக்கப்படுகின்றன.

பகலில் ஓய்வெடுத்து இரவில் உணவு தேடுபவை
ரக்கூன் நாய்கள். ஒரு மணி நேரத்துக்கு 24 கிலோ மீட்டர்
வேகத்தில் பாய்ந்துசெல்லும்.

உணவுக்காக 7 முதல் 10 கிலோ மீட்டர் தொலைவுகூட
பயணிக்கும். ஆனாலும், பெரும்பாலான நேரங்களில்
தங்கள் வசிப்பிடத்தைச் சுற்றி ஒன்றரை கிலோ மீட்டர்
தொலைவுக்குள்ளேயே சுற்றிவரும்.

தவளை, எலி, மீன், பறவை, தேவாங்கு, குரங்கு
போன்றவற்றை வேட்டையாடி உண்ணும் வழக்கமுள்ள
இவை சிலசமயம் பழங்களையும் உண்ணும். உணவு
கிடைக்கவில்லையெனில் நீந்திச்சென்று மீன்களைப்
பிடித்து உண்ணும்.

தண்ணீருக்கு அருகிலுள்ள மரப் பொந்துகளையே
தங்களது வசிப்பிடமாகக் கொண்டுள்ளன ரக்கூன் நாய்கள்.
20லிருந்து 30 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் மரப் பொந்துகளே
அவற்றின் சொகுசான வசிப்பிடம்.

சராசரியாக 6 ஆண்டு ஆயுட்காலம் கொண்டவை இவை.
அதிகபட்சமாக 21 ஆண்டுகள் உயிர் வாழும். ஒரு பிரசவத்தின்போது
3 முதல் 7 குட்டிகளைப் பெற்றெடுக்கும்.

எல்லா உயிரினங்களுக்கும் தாய்மை உணர்வு
ஒன்றேதான் என்பதை உணர்த்துகிறது ரக்கூன் நாயின் இந்தச் செயல்.

Latest news