ஒரு வாரத்துக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால் மக்கள் அவதி

59

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நாசரேத்பேட்டையில் ஒரு வாரத்துக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சுற்று வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக, நாசரத்பேட்டை யமுனா நகரின் 7 தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை நின்ற பிறகும், இதுவரை மழை நீர் வடியாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட, மிதந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளும் வீடுகளுக்குள் நுழையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்.

Advertisement