பெண்கள் சிகப்பு லிப்ஸ்டிக் போட்டால் தண்டனை கொடுக்கும் விநோத நாடு!

233
Advertisement

கிம் ஜாங் உன் அதிபராக இருக்கும் வட கொரியாவில் விநோத சட்டங்களுக்கும்  அடக்குமுறைகளுக்கும் பஞ்சமில்லை.

சர்வாதிகாரமிக்க இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் தனி மனித சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது. இதில் பெண்களின் நிலை அதை விட மோசமானதாக உள்ளது.

சர்வதேச நாடுகளில் கிடைக்கும் பல மேக்கப் பொருட்களுக்கு வட கொரியாவில் தடை உள்ளது. முதலாளித்துவத்தை வெளிப்படுத்தும் நிறமாக இருப்பதாக கூறி சிகப்பு நிற லிப்ஸ்டிக்கு வட கொரியாவில் கடுமையான தடை உள்ளது.

அதே போல மிதமான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக் அணிய மட்டுமே பெண்களுக்கு அனுமதி உண்டு.

அதிகமான மேக்கப் போடும் பெண்களை கட்டுப்படுத்த வட கொரிய தெருக்களில் சிறப்பு கண்காணிப்பு படைகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், தலைமுடிக்கு வர்ணம் பூசுவதும் தலைமுடியை விரித்து விடுவதற்கும் பெண்களுக்கு தடை உள்ளது. பெண்கள் செயின் மற்றும் மோதிரங்கள் அணிவதையும் தவிர்க்க வலியுறுத்தும் வட கொரியாவில் இறக்குமதி செய்யப்பட்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.