திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் ராகுல் காந்தி

141

கர்நாடகாவில் நடந்த ராகுல் காந்தியின் 33-வது நாள் பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தேச ஒற்றுமையை வலியுறுத்தி செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.

தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் நடைபயணம் ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். பாதயாத்திரையின் 33-வது நாளில் தும்கூர் மாவட்டத்தில் உள்ள போச்சட்டேயிலிருந்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை மீண்டும் தொடங்கினார்.

காலை 6.30 மணிக்கு ராகுல் காந்தியின் பாதயாத்திரை அங்கிருந்து தொடங்கியது. பாதயாத்திரையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.