தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்- அதிர்ச்சியில் காங்கிரஸ்

220

கடலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நெல்லையில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோரனை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. விழல்கட்டி, பிள்ளையார் கோவில் தெரு, மந்தகரை ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், சத்தியமூர்த்தி பவனா அல்லது சண்டை மூர்த்தி பவனா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

திமுக-வுடன் தோழமையாக இருக்கும் வரை இதுதான் நடக்கும் என்றும், காங்கிரஸ் கட்சியின் நற்பெயரை கெடுக்கும் ஊழல்வாதி கே.எஸ்.அழகிரி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அச்சிடப்பட்டுள்ளது.