சுற்றுலா பயணிகளுக்கு தடை கவலையில் மக்கள்

231

ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து 78 ஆயிரம் கன அடியாக குறைந்த போதிலும், 12வது நாளாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 78 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும், மெயின் அருவி, சினி ஃபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் 12வது நாளாக தடை தொடர்கிறது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையின் பேரில், காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டு, சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆற்றுப்பகுதிகளிலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.