பட்டாசு வெடிக்க தடை அதிர்ச்சியில் மக்கள்

273

திருவள்ளூரில் தீபாவளி பண்டிகை அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பா.கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மாவட்டத்தில் 25 பட்டாசு கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 28 காவலர்கள் பாதுகாப்பு பணியில் மேற்கொள்ளப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தீபாவளி அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும், நேரம் மீறி  பட்டாசு  வெடிப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.