கனமழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

354

கனமழை எச்சரிக்கை காரணமாக, கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்திற்கு 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகளுக்கு 04633290548 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் கட்டுப்பாட்டு அறை எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் 1070 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 0462-2501012 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.