வாத்துகளாக மாறிய  “பென்குயின்கள்

242
Advertisement

“பென்குயின்கள்” என்ற பெயரே பலரையும்  கவர்ந்துவிடும்,அவைகளை  பார்க்கும்போது கவலைகளை மறந்து ரசித்துக்கொண்டு இருபோம்.

பென்குயின்கள் 80 சதவீதம் கடற்கரையிலேயே வாழ்கின்றன,இவை தங்கள் வாழ்நாட்களில் பாதி நேரம் கடலிலும், மீதி நேரம் கடற்கரையிலும் இருக்கும்.

இந்நிலையில்,பென்குயின் கூட்டம் ஒன்று பட்டாம்பூச்சி ஒன்றை  துரத்திக்கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இந்த வீடியோவில்,பென்குயின் கூட்டம் ஓன்று நிலப்பரப்பில்,வாத்து போல தன் இறக்கைகளை சிறகடித்தபடி குதித்து குதித்து சென்று,முன்னே பறந்துகொண்டு  இருக்கும் வெள்ளை நிற  பட்டாம்பூச்சி ஒன்றை பிடிக்க முயற்சி செய்கிறது.

சில நொடிகள் மட்டுமே இந்த வீடியோ இருந்தாலும்,இணையவாசிகளை  மீண்டும் மீண்டும் பார்கவைத்துள்ளது இந்த  யூடான பட்டாம்பூச்சி வேட்டை.