இனி இரவு நேர ரயில் பயணங்களில் இந்த டென்ஷன் இருக்காது! நிம்மதியா தூங்கலாம்

149
Advertisement

பொதுவாக இரவு நேர ரயில் பயணங்களின் போது, இறங்க வேண்டிய ரயில் நிலையத்தில் இறங்காமல் விட்டு விடுவோமா என்ற பயத்திலேயே பலரும் தூங்காமல் அவதிப்படுவார்கள்.

ஆனால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தை பயன்படுத்தினால் நிம்மதியாக உறங்கலாம்.

ரயில்வே வாடிக்கையாளர் சேவை எண்ணான 139க்கு டையல் செய்து, destination alert optionஐ தேர்வு செய்ய எண் இரண்டை அழுத்தி பின் டிக்கெட்டில் உள்ள 10 டிஜிட் PNR எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.

Alert call வேண்டும் என்றால் எண் ஒன்றை அழுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து விட்டால், இறங்க வேண்டிய ரயில் நிலையத்திற்கு 20 நிமிடத்திற்கு முன் Alert call வரும். இதனால் முன்பிருந்தே இருக்கும் பதட்டத்தை தவிர்த்து, இரவில் அமைதியான தூக்கத்தை பயணிகள் உறுதி செய்ய முடியும். இந்த சேவை இரவு 11 மணியில் இருந்து காலை 7 மணி வரை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.