அடடே! ஆஸ்கர் விருதோட மதிப்பு வெறும் ஒரு டாலர் தானா?

271
Advertisement

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வழக்கமான விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

1929ஆம் ஆண்டு, மே மாதம் 16ஆம் தேதி முதன்முறையாக ஆஸ்கர் விருதுகள் விழா நடந்தது. அவ்விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஜேனட் கெய்னரும் (Janet Gaynor), சிறந்த நடிகருக்கான விருதை எமில் ஜேனிங்ஸும் (Emil Jannings) பெற்றனர்.

1939ஆம் ஆண்டு வரை ஆஸ்கர் விருது Academy Of Merit என்றே அழைக்கப்பட்டு வந்தது.

அகாடெமியின் நிர்வாக இயக்குனர் மார்கரெட் ஹெரிக், ஆஸ்கர் விருதின் உருவத்தை தனது உறவினர் ஆஸ்கருடன் ஒப்பிட்டதாலேயே, ஆஸ்கர் விருது என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது. எட்டரை பவுண்ட்கள் எடை இருக்கும் ஆஸ்கர் விருதை பெறுபவர்களால் விருதை விற்க முடியாது. திரும்ப அகாடெமிக்கே ஒரு டாலருக்கு விற்க மட்டும் அனுமதி உள்ளது.

1974ஆம் ஆண்டு பத்து வயதில் Tatum O Neal மிக இளவயதில்ஆஸ்கர் விருதை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். 2020ஆம் ஆண்டு தனது 83ஆம் வயதில் விருது பெற்ற Anthony Hopkins ஆஸ்கர் வென்ற வயதான நபர் என்ற பெருமையை பெற்றார்.

2013ஆம் ஆண்டு 4 மில்லியன் மதிப்பை உடைய ஆடையை அணிந்து வந்த ஹாலிவுட் நடிகை  Jennifer Lawrence, ஆஸ்கர் மேடையில் தடுக்கி விழுந்த நிகழ்வு பேசுபொருளாக மாறியது.

414 நிமிடங்கள் கால அளவை கொண்ட War and Peace தான் இதுவரை ஆஸ்கர் விருதை வென்ற மிக நீண்ட திரைப்படம் ஆகும். ஆஸ்கர் வரலாற்றில் Heath Ledger மற்றும் Peter Finch ஆகிய இருவர் மட்டுமே மரணத்திற்கு பிறகு ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.