பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த OPS மற்றும் EPS

228

மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் அருகருகே சிரித்தபடி பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தனர். இருவரும் சிரித்தபடி ஒன்றாக நின்று பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக, மதுரை விமான நிலையத்தின் உள்ளே எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே காத்திருந்தனர். அவர்களின் வரவேற்பை மட்டும் ஏற்றுக் கொண்ட மோடி, அவர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திண்டுக்கல் சென்றார்.

அதே போல, பட்டமளிப்பு விழா முடிந்து, மோடி மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோதும், பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகியோரிடம் தனித்தனியே சந்தித்துப் பேசாமல், தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றார். இதனிடையே, மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் அருகருகே சிரித்தபடி நின்று, பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. அண்மை காலமாக இருவரும் எலியும் பூனையுமாக உள்ள நிலையில், இருவரும் அருகருகே சிரித்தபடி நின்ற புகைப்படம், அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.