பிஸ்ட் ஆடியோ லாஞ்ச்க்கு நோ… புதுவிதமாக பட ப்ரோமோஷனில்  படக்குழு திட்டம்

341
Advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.  சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து பல சாதனைகளை நிகழ்த்தி  வருகிறது.

வழக்கமாக விஜய் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும். இந்த நிலையில்,பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் படம் வெளியாக இருப்பதால், கடைசி நிமிட தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.அதனால், ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி வேண்டாம் என படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள்  தெரிவிக்கிறது.

மேலும், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பதிலாக பீஸ்ட் படத்தின் ப்ரொமோஷன் பணிகளை புதுவிதமாக செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. எனினும் ரசிகர்கள் தான் வழக்கம் போல்  ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை எதிர்ப்பார்த்து உள்ளனர். பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். இதனால், ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், விஜயின் பிரத்யேக நேர்காணல் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்திருக்கிறது. சன் டிவியில் இந்த நேர்காணல் ஒளிபரப்பாகும் எனத்  தெரிகிறது.