தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

265
Advertisement

தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அன்னிய மரங்களை அகற்ற கொள்கை முடிவெடுத்துள்ள அரசே, யூக்கலிப்டஸ் மரங்களை ஏன் நடுகிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இனி தமிழகத்தில் யூக்கலிப்டஸ் மரங்களை நடக் கூடாது என்று உத்தரவிட்டனர். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம், ஆங்கிலேயர்களால் 1843ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்பட்டது.

இந்த மரங்கள் 8 மணி நேரத்திற்கு தேவையான நீரை தானே உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி விடுகிறது. இந்த மரம் நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கணிசமான அளவு குறைத்து விடுகிறது.